Do Survey!! Earn Cash!!!

திங்கள், 3 மே, 2010

நிகழ்கால வினைமுற்று தொடர் (PRESENT PERFECT CONTINUOUS TENSE)

ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி தற்பொழுதும் (அதைப்பற்றிக் கூறும் இச்சமயம் வரையில்) தொடர்ந்துக்கொண்டிருக்கின்ற நிகழ்வை விளக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

I have been working here for 10 years
நான் 10 ஆண்டுகளாக இங்கே வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்

10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்ற தொடங்கியவர் இப்பொழுதும் பணியை தொடர்ந்துக்கொண்டிருக்கிறார். பணியாற்றும் நபர் தொடர்ந்து பணியில் இருக்கிறார்.

SIGNAL WORDS :
since, for, all week, for days, lately, recently, over the last few months, how long (Question word)


நிகழ்கால வினைமுற்று தொடர் காலத்தில் நேர்மறை, எதிர்மறை, கேள்வி வாக்கியங்களை அமைக்கும் முறைகள் :
POSITIVE:
Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing
1. I /You / We / They + have + been + working
2. He / She / It + has + been + working

NEGATIVE :
Subject + Auxiliary verb + not + Auxiliary verb + Main verb with ing
1. I /You / We / They + have + not + been + working
2. He / She / It + has + not + been + working

QUESTION :
Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing?
1. Have + I / You / We / They + been + working
2. Has + he/ she/ It + been + doing a job?

துணை வினைச்சொல் வாக்கியத்தின் ஆரம்பத்திலும், அதனை தொடர்ந்து எழுவாய் வந்துள்ளதை நினைவில் கொள்க. இவற்றில் துணை வினைச்சொல் இரண்டு இடங்களில் பயன்படுவதை கவனியுங்கள்.

குறிப்பு :
இந்த காலத்தில், நிகழ்ந்துக்கொண்டிருக்கின்ற செயலை குறிப்பதானால் அதனின் காலத்தின் அளவையும் குறிப்பிட வேண்டியது அவசியம் அல்லவா! அதற்கு 3 முக்கியமான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை for, since, from.

சரி... சொற்களை தெரிந்துக்கொண்டோம். அவை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று காண்போம்.
For : நிகழ்வு நிகழ்ந்த மொத்த கால அளவை குறிப்பிடும்போது (for 3 hours, for three years, for over 3 hours)
Since, from : நிகழ்வு ஆரம்பித்த காலத்தை குறிப்பிடும்போது (since 2000, since 9am, from last week, from 9 O'clock).

PRESENT TENSE TEST

PRESENT TENSE
1. I ___ to watch movies
loves
love
loving

2. I never ___ tea in the morning
drinking
drinks
drink

3. The Telephone office ___ at 9:00 am
open
opens
opening

4. The earth ___ round the sun, doesn't it?
go
goes
going

5. Ganesh ___ two children now
has
have
had

6. We ______ to see that movies
wants
want
wanted

7. It _____ a lot here
rains
rain
is raining

8. When the phone ___, please answer it
ringing
ring
rings

9. You ____ everyone in this street
knows
know
knew

10. She ____ in India
live
lives
is living

Score =
Correct answers: