Do Survey!! Earn Cash!!!

திங்கள், 29 மார்ச், 2010

நிகழ்கால வினைமுற்று - குறிச்சொற்களின் பயன்பாடுகள்

நிகழ்கால வினைமுற்று காலத்தில் எந்தெந்த குறிச்சொற்கள் பயன்படுகின்றன என்பதை பார்த்தோம். குறிப்பாக ever, never, just, for, since, yet போன்றவைகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும், அவைகளின் வேறுபாட்டினையும் காண்போம். இவற்றிற்கிடையே சிறு சிறு வேறுபாடுகள் உள்ளன. அவைகளை வேறுபடுத்தி தெரிந்துவிட்டால் வாக்கியம் அமைக்க ஏதுவாக இருக்கும்.

ever :
Have you ever been to Australia?

நீ எப்பொழுதாவது ஆஸ்திரேலியாவிற்கு போயிருக்கிறாயா?

Have you ever met him?
நீ எப்பொழுதாவது அவனை சந்தித்திருக்கிறாயா?

never :
I have never been to Australia?
நான் ஒருபொழுதும் ஆஸ்திரேலியாவிற்கு போயிருக்கவில்லை

தமிழில் நாம் கூறும்பொழுது நான் ஆஸ்திரேலியாவிற்கு போனதில்லை என்போம்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யும்போது சிறு மாறுதல்கள் இடம்பெறும் ஆகையால் குழப்பம் தவிர்த்து மேலும் மேலும் படித்து பழகுங்கள்.

I have never met him
நான் ஒருபொழுதும் அவனை சந்தித்திருக்கவில்லை (அல்லது)
நான் ஒருபொழுதும் அவனை சந்திக்கவில்லை

Just :
She has just arrived
அவள் இப்பொழுது வந்திருக்கிறாள்
Have you just finished work
நீ இப்பொழுது வேலை முடித்திருக்கிறாயா?
For:
I have lived here for six years
நான் ஆறு வருடங்களாக இங்கே வசித்திருக்கிறேன்
I have worked here for two months
நான் இரண்டு மாதங்களாக இங்கே வேலைசெய்திருக்கிறேன்

Since:
I have lived here since 1987

நான் 1987 லிருந்து இங்கே வசித்திருக்கிறேன்

I have worked here since Febraruy
நான் பிப்ரவரி மாதத்திலிருந்து இங்கே வேலை செய்திருக்கிறேன்


Yet:
She has not phoned yet
அவள் இன்னும் தொலைபேசியில் அழைத்திருக்கவில்லை

I haven't finished yet
நான் இன்னும் முடித்திருக்கவில்லை

ஞாயிறு, 28 மார்ச், 2010

பூக்களின் பெயர்கள்

Bluebell –ப்ளுபெல்

Butterfly pea – சங்கு பூ

Cannon Ball- நாகலிங்க பூ

Cassia – கொன்றை

Chrysanthemum- செவ்வந்தி

Coral Jasmine- பவளமல்லி

Crossandra – கனகாம்பரம்

Daffodil -டப்போடில்

Daisy – டெய்சி

Fox Glove- பாக்ஸ் க்ளோ

Hibiscus – செம்பருத்தி

Jasmine – மல்லிகை

Lily – அல்லி

Lotus- தாமரை

Marigold- துலுக்கசாமந்தி

Oleander- அரளி

Orchid- வெள்ளை மந்தாரை

Plumeria- சம்பங்கி

Rose- ரோஜா

Sunflower- சூரியகாந்தி

Tulip - துலிப்

Water Lily - வெள்ளாம்பல்




பழங்களின் பெயர்கள்

Apple- ஆப்பிள்

Apricot- வாதுமைப்பழம்

Banana - வாழைப்பழம்

Cherry – செர்ரி

Custard Apple- சீதாப்பழம்

Fig- அத்திப்பழம்

Grapes – திராட்சை

Guava- கொய்யா

Jackfruit – பலாப்பழம்

Kiwifruit – கிவி

Lychee- லிச்சீ

Mango-மாம்பழம்

Orange- ஆரஞ்சு

Papaya – பப்பாளி

Peach – பீச்

Pear – பேரிக்காய்

Pineapple – அன்னாசி

Plum- ப்ளம்

Pomegranate – மாதுளை

Sapota- சப்போட்டா

Strawberry – ஸ்ட்ராபெரி

Watermelon – தர்பூசணி

செவ்வாய், 9 மார்ச், 2010

கதை மூலம் ஆங்கிலம்

A thirsty Crow

Once there was a crow. It was very thirsty. It was summer. The day was very hot. He looked for water here and there. He flew to many places. But he could not find any water.

At last he saw a pot of water. But there was only very little water inside the pot. It tried to drink. The water was not in its reach. He thought of a plan.

The crow collected stones from nearby. It dropped them into the pot, one by one. The water level came up. The crow drank the water and flow away happily.

இது நமக்கு நன்றாக தெரிந்த கதைதான் இருந்தாலும் ஆங்கிலம் கற்க எளிமையாக இருக்கும் மேலும் எளிதாக புரிந்துக்கொள்ள முடியும் என்று நம்புகின்றோம். சரி... இப்பொழுது இந்த கதையின் தமிழாக்கத்தினை பார்ப்போம்.

ஒரு தாகமான காகம்

முன்னொரு காலத்தில், ஒரு காகம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு மிகவும் தாகமாக இருந்தது. அப்போது கோடைக்காலம். அந்த நாட்களில் மிகவும் வெப்பமாக இருந்தது. அந்த காகம் தாகத்தை தணிக்க தண்ணீருக்காக இங்கும் அங்கும் தேடித் பார்த்தது. பல இடங்களுக்கு பறந்தது. ஆனால் காகத்தால் தண்ணீரை கண்டுப்பிடிக்க இயலவில்லை.

கடைசியில் ஒரு பானையில் தண்ணீரை பார்த்தது. ஆனால் பானையினுள் தண்ணீர் சிறிதளவே இருந்தது. அது குடிக்க முயன்றது. தண்ணீர் காகத்திற்கு எட்டும் அளவில் இல்லை. அது ஒரு திட்டத்தை யோசித்தது.

காகம் பக்கத்திலுள்ள கற்களை ஒன்று சேர்த்தது. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பானைக்குள் போட்டது. தண்ணீர் மட்டம் மேலே வந்தது. காகம் தண்ணீரைக் குடித்து, சந்தோஷமாக பறந்தது.

கதை மூலம் ஆங்கிலம் உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகின்றோம்.

புதன், 3 மார்ச், 2010

நிகழ்கால வினைமுற்று - Present Perfect

நிகழ்கால வினைமுற்று என்பது நடந்து முடிந்த நிகழ்ச்சியை விளக்க பயன்படுத்துகின்றோம். இவ்வாக்கிய அமைப்பானது இறந்தகாலத்திற்கும் நிகழ்க்காலத்திற்க்கும் தொடர்புடையதாக இருக்கின்றது.

ஆங்கில பேச்சு நடைமுறையில், நிகழ்கால வினைமுற்று அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே இதனை நன்றாக பயில வேண்டும்.

இவை பயன்படும் சூழ்நிலைகள் :
1. ஒரு நிகழ்வானது இறந்தகாலத்தில் தொடங்கி தற்பொழுதும் தொடர்வதை விளக்க
2. ஒரு செயல் அறியப்படாத நேரத்தில் நிகழ்ந்துள்ளதை குறிப்பிட
3. இறந்தகாலத்தில் முற்றுப்பெற்ற செயலால் இப்பொழுது (நிகழ்காலத்தில்) உணரப்படும்போது
4. இறந்தகாலத்தில் ஆரம்பமான ஒரு நிகழ்வு சமீபத்தில் முற்றுப்பெற்றதை விளக்குகின்றது.

1. ஒரு நிகழ்வானது இறந்தகாலத்தில் தொடங்கி தற்பொழுதும் தொடர்வதை விளக்க :
Sankar has lived in this house for three years
சங்கர் மூன்று வருடங்களாக இந்த வீட்டில் வசித்திருக்கிறார்
சங்கர் மூன்று வருடங்களுக்கு வசிக்க ஆரம்பித்து (இறந்தக்காலத்தில் தொடங்கி) இப்பொழுதும் (நிகழ்காலம்) தொடர்ந்து வசித்துக்கொண்டிருக்கிறார் என்பது பொருள்.

2. ஒரு செயல் அறியப்படாத நேரத்தில் நிகழ்ந்துள்ளதை குறிப்பிட
இறந்த காலத்தில் எப்போதோ ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம். நிகழ்ந்த நேரமோ நமக்கு தெரியாது... இந்த சந்தர்ப்பாங்களில் நிகழ்கால வினைமுற்று பயன்படுத்தலாம்.
I have already seen that film
நான் ஏற்கனவே அந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்
இதில் "ஏற்கனவே திரைப்படம் பார்த்திருக்கிறேன்" என்பது முடிவுப்பெற்ற ஒரு செயல் ஆனால் நிகழ்ந்த நேரம் குறிப்பிடப்படவில்லை.

3. இறந்தகாலத்தில் முற்றுப்பெற்ற செயலால் இப்பொழுது (நிகழ்காலத்தில்) உணரப்படும்போது
நீங்கள் வெளியே செல்லும் வழியில் பேனாவை தவறவிட்டுவிடுகிறீர்கள் பிறகு தேவையின்போது தவறவிட்டதை உணருகிறீர்கள்... அதனை
I have lost my pen
நான் பேனாவை தொலைத்திருக்கிறேன்

4. இறந்தகாலத்தில் ஆரம்பமான ஒரு நிகழ்வு சமீபத்தில் முற்றுப்பெற்றதை விளக்க
இறந்த காலத்தில் ஒரு நிகழ்வு ஆரம்பித்து சற்று நேரத்திற்கு முன்பு முடிவுப்பெற்றதை விளக்க பயன்படுத்துகின்றோம்.
I have just finished my work
நான் இப்பொழுது எனது வேலையை முடித்திருக்கிறேன் (அல்லது)
நான் இப்பொழுதுதான் எனது வேலையை முடித்தேன்.

SIGNAL WORDS :
ever, never, once, many times, several times, before, for, so far, already, yet, not yet, since, every, just, recently, up to now, till now etc.

நிகழ்கால வினைமுற்று காலத்தில் நேர்மறை, எதிர்மறை, கேள்வி வாக்கியங்களை அமைக்கும் முறைகளை கற்போம்.
POSITIVE:
Subject + Auxiliary verb + Main verb (Past Participle)
I / You / We / They + have + gone to school
He / She / It + has + gone to school
வினைச்சொல் "Past Participle" சொல்லாக வரும்.

NEGATIVE :
Subject + Auxiliary verb + not + Main verb (Past Participle)
I / You / We / They + have + not + gone to school
He / She / It + has + not + gone to school

எழுவாயை தொடர்ந்து துணைவினைச்சொல்லுடன் not சேர்ந்து வரும்.

QUESTION :
Auxiliary verb + Subject + Main verb (Past Participle)?
Have + I / You / We / They + gone to school
Has + He / She / It + gone to school
துணை வினைச்சொல் வாக்கியத்தின் ஆரம்பத்திலும், அதனை தொடர்ந்து எழுவாய் வந்துள்ளதை நினைவில் கொள்க.

செவ்வாய், 2 மார்ச், 2010

நிகழ்கால தொடர்விணை - எடுத்துக்காட்டு

1. I am going to a movie tonight with my friends
நான் இன்றிரவு எனது நண்பர்களுடன் திரைப்படத்திற்கு போக போகின்றேன்

2. I am studying French at a language school
நான் மொழி பயில் கூடத்தில் பிரெஞ்சு மொழி படித்துக்கொண்டிருக்கின்றேன்

3. I am brushing my teeth
நான் பல் துலக்கிக்கொண்டிருக்கின்றேன்

4. I am studying to become a doctor
நான் மருத்துவராக ஆக படித்துக்கொண்டிருக்கின்றேன்

5. I am doing my homework
நான் எனது வீட்டுப்பாடங்களை செய்துக்கொண்டிருக்கின்றேன்

6. You are dressing
நீ உடையணிந்துக்கொண்டிருக்கிறாய்

7. You are helping to people
நீ மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறாய்


8. You are having a rest
நீ ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கிறாய்

9. You are learning English now
நீ இப்பொழுது ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கிறாய்

10. You are not swimming now
நீ இப்பொழுது நீந்திக்கொண்டிருக்கவில்லை

11. We are planning our work
நாங்கள் எங்களுடைய வேலையை திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்

12. We are going to lunch now, would you like to join us?
நாங்கள் இப்பொழுது மதிய சாப்பாட்டிற்கு போக போகின்றோம், நீ எங்களுடன் வர விரும்புகின்றாயா?

13. We are writing
நாங்கள் எழுதிக்கொண்டிருக்கின்றோம்

14. We are walking to school
நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு நடக்கின்றோம்

15. We are having a good time
நாங்கள் நல்ல நேரத்தை பெற்றிருக்கின்றோம்

16. They are playing volleyball
அவர்கள் கைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்

17. They are laughing
அவர்கள் அவர்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்

18. They are going to birthday party
அவர்கள் பிறந்தநாள் விழாவிற்கு போக இருக்கிறார்கள்

19. They are dancing
அவர்கள் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள்

20. They are waiting for the train
அவர்கள் புகை வண்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்

21. He is chasing a butterfly
அவன் வண்ணத்துப்பூச்சியை துரத்துகின்றான்

22. He is holding an umbrella
அவான் குடையை பிடித்துக்கொண்டிருக்கிர்றான்

23. He is learning grammar
அவன் இலக்கணம் கற்றுக்கொண்டிருக்கின்றான்

24. Murugan is coming
முருகன் வந்துக்கொண்டிருக்கிறான்


25. Dad is washing the car now
அப்பா இப்பொழுது காரை கழுவிக்கொண்டிருக்கிறார்

26. He is not wearing a tie today
அவன் டை அணிந்துக்கொண்டிருக்கவில்லை

27. She is going to the cinema
அவள் திரைப்படத்திற்கு போக போகிறாள்

28. She is always coming to class late
அவள் எப்பொழுதும் வகுப்பிற்கு தாமதமாக வந்துக்கொண்டிருக்கிறாள்

29. She is drinking cold water
அவள் குளிர்ந்த தண்ணீரை குடித்துக்கொண்டிருக்கிறாள்

30. She is wearing a crown
அவள் கிரீடம் அணிந்துக்கொண்டிருக்கிறாள்

31. She is singing loudly
அவள் சத்தமாக பாடிக்கொண்டிருக்கிறாள்

32. It is’not raining now. We can go outside
இப்பொழுது மழை பெய்துக்கொண்டிருக்கவில்லை. நாம் வெளியே போகலாம்

33. The train is coming
புகைவண்டி வந்துக்கொண்டிருக்கின்றது

34. The phone is ringing
தொலைப்பேசி ஒலித்துக்கொண்டிருக்கின்றது

35. It is eating
அது சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றது

36. It is jumping high
அது உயரமாக தாண்டிக்கொண்டிருக்கின்றது

37. What are you doing?
என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய்

38. What are you cooking?
என்ன சமைத்துக்கொண்டிருக்கின்றாய்

39. What are you doing this weekend?
இந்த வார இறுதியில் என்ன செய்வாய்?

40. What classes are you taking this semester?
இந்த பகுதியாண்டில் என்ன வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்

41. What time are you going to the cinema?
நீ எந்த நேரத்தில் திரைப்படத்திற்கு செல்வாய்?

42. What are you drinking now?
என்ன குடித்துக்கொண்டிருக்கிறாய்?

43. What are you thinking?
என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?

44. What time is she coming?
அவள் எந்த நேரத்தில் வருவாள்?

45. Where are you playing tennis tonight?
இன்றிரவு டென்னிஸ் எங்கு விளையாடுவாய்?

46. Why aren’t you doing your homework?
ஏன் நீ வீட்டுப்பாடங்களை செய்யவில்லை?

47. Why are you studying?
ஏன் நீ படித்துக்கொண்டிருக்கிறாய்?

48. Where is she staying?
அவள் எங்கே தங்கிக் கொண்டிருக்கிறாள்

49. Where are you going now?
எங்கே நீ இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறாள்

50. When are you leaving?

எப்பொழுது நீ புறப்படுவாய்?

PRESENT TENSE TEST

PRESENT TENSE
1. I ___ to watch movies
loves
love
loving

2. I never ___ tea in the morning
drinking
drinks
drink

3. The Telephone office ___ at 9:00 am
open
opens
opening

4. The earth ___ round the sun, doesn't it?
go
goes
going

5. Ganesh ___ two children now
has
have
had

6. We ______ to see that movies
wants
want
wanted

7. It _____ a lot here
rains
rain
is raining

8. When the phone ___, please answer it
ringing
ring
rings

9. You ____ everyone in this street
knows
know
knew

10. She ____ in India
live
lives
is living

Score =
Correct answers: