நிகழ்கால தொடர்விணை என்பது நிகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு செயல் அல்லது சம்பவத்தை விவரிக்க பயன்படுகின்றது. இவை எந்தெந்த சூழ்நிலைகளில் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.
1. ஒரு செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது
2. தொடர்ந்து நடைபெறுகின்ற நிகழ்வு தற்சமயம் நடைபெறாமலும் இருக்கலாம்
3. அண்மை நடைபெற இருக்கின்ற நிகழ்வை வெளிப்படுத்த
4. மீண்டும் மீண்டும் நடைபெறுகின்ற ஒரு நிகழ்வை விவரிக்க
1. ஒரு செயல் அல்லது சம்பவம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது
Ganesh is writing
கணேஷ் படித்துக்கொண்டிருக்கிறான்
"படித்துக்கொண்டிருக்கிறான்" என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து இந்நேரம் வரை நிகழ்ந்துக்கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்வு.
2. தொடர்ந்து நடைபெறுகின்ற நிகழ்வு தற்சமயம் நடைபெறாமலும் இருக்கலாம்
My father is building a house
என் தந்தை ஒரு வீட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்
3. அண்மை நடைபெற இருக்கின்ற நிகழ்வை வெளிப்படுத்த
I am going to temple tomorrow
"நாளை" என்ற குறிச்சொல் எதிர்காலத்தை குறிப்பதால் எப்படி நிகழ்கால தொடர்விணையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்று குழப்பம் வேண்டாம். "நான் நாளை கோவிலுக்கு செல்வேன்" என்று பொருள் கொண்டு அண்மையில் அதாவது விரைவில் நடக்கவிருக்கின்ற நிகழ்வை கூறும்போது நாம் நிகழ்கால தொடர்விணையை பயன்படுத்தலாம்.
Future Reference Signal word : Tomorrow, next week
4. மீண்டும் மீண்டும் நடைபெறுகின்ற ஒரு நிகழ்வை விவரிக்க
That boy is kicking the back of my chair
அந்த சிறுவன் என்னுடைய நாற்காலியின் பின்புறத்தை உதைத்துக்கொண்டே இருக்கிறான்
இது மீண்டும் மீண்டும் நடைபெறுகின்ற நிகழ்வைக் காட்டுகின்றது.
SIGNAL WORDS :
Now, at the moment, today, this week
நிகழ்கால தொடர்விணையில் மேற்கண்ட குறிச்சொற்களை உபயோகப்படுத்துகின்றோம்.
நிகழ்கால தொடர்விணையில் நேர்மறை, எதிர்மறை, கேள்வி வாக்கியங்களை அமைக்கும் முறைகளை கற்போம்.
POSITIVE:
Subject + Auxiliary verb + Main verb with ing
1. I + am + going to school
2. You / We / They + are + going to school
3. He / She / It + is + going to school
வினைச்சொல் (Main verb) Present tense (base form)+ing சேர்ந்து வரும்.
NEGATIVE :
Subject + Auxiliary verb + not + Main verb with ing
1. I + am + not + going to school
2. You / We / They + are + not + going to school
3. He / She / It + is + not + going to school
எழுவாயை தொடர்ந்து துணைவினைச்சொல்லுடன் not சேர்ந்து வரும்.
QUESTION :
Auxiliary verb + Subject + Main verb with ing?
1. Am + I + going to school
2. Are + You / We / They + going to school
3. Is + He / She / It + going to school
துணை வினைச்சொல் வாக்கியத்தின் ஆரம்பத்திலும், அதனை தொடர்ந்து எழுவாய் வந்துள்ளதை நினைவில் கொள்க.
