1. நிகழ்காலத்தில் நடக்கும் சாதாரண செயலை குறிக்க
2. வழக்கமாக செய்யும் செயல்
3. அண்மை எதிர்காலத்தை குறிக்க
4. நிலையான உண்மைகள்
மேற்கண்ட சூழ்நிலைகளில் வாக்கியம் அமைக்க Present Tense (நிகழ்காலம்) பயன்படுகின்றது.
2. I brush my teeth everyday
always, often, normally, usually, regularly, occasionally, sometimes, seldom, never, every day, every week, every year, on Sundays, at weekends, after school.
நிகழ்கால வாக்கிய அமைப்பில் மேற்கண்ட குறிச்சொற்களை உபயோகப்படுத்துகின்றோம்.
சாதாரண நிகழ்காலத்தில் Third Person Singular அதாவது He / She / It போன்றவற்றுடன் main verb உடன் "s” or “es” இணைந்து வரும் என்பதை நினைவில் கொள்க. நிகழ்கால அட்டவணையை பயிலவும்.
He/she/it
does, Has, works, reads, Applies, washes, can
சாதாரண நிகழ்காலத்தில் நேர்மறை, எதிர்மறை, கேள்வி வாக்கியங்களை அமைக்கும் முறைகளை கற்போம்.
POSITIVE:
Subject + Auxiliary verb + Main verb
1. I / You / We / They + go to school
2. He / She / It + goes to school
இதில் துணை வினைச்சொல் பயன்படுத்தப்படுவதில்லை.
NEGATIVE :
Subject + Auxiliary verb + not + Main verb
1. I / You / We / They + do+ not + go to school
2. He / She / It + does + not + go to school
எழுவாயை தொடர்ந்து துணைவினைச்சொல்லுடன் not சேர்ந்து வரும். வினைச்சொல் (Main verb) Present tense (base form) ல் தான் இருக்கும்.
QUESTION :
Auxiliary verb + Subject + Main verb?
1. Do + I / You / We / They + go to school ?
2. Does + He / She / It + go to school ?
துணை வினைச்சொல் வாக்கியத்தின் ஆரம்பத்திலும், அதனை தொடர்ந்து எழுவாய் வந்துள்ளதை நினைவில் கொள்க.
நேர்மறை, எதிர்மறை, கேள்வி வாக்கியத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகள் :
POSITIVE FORM :
I go to school
நான் பள்ளிக்கு செல்கிறேன்
You go to school
நீ பள்ளிக்கு செல்கின்றாய்
We go to school
நாம் (அ) நாங்கள் செல்கின்றோம்
They go to school
அவர்கள் பள்ளிக்கு செல்கின்றார்கள்
He goes to school
அவர் (அ) அவன் பள்ளிக்கு செல்கின்றார்(ன்)
She goes to school
அவர் (அ) அவள் பள்ளிக்கு செல்கின்றார்(ள்)
It goes to school
அது பள்ளிக்கு செல்கின்றது
NEGATIVE FORM :
I don’t go to school
நான் பள்ளிக்கு செல்லவில்லை
You don’t go to school
நீ பள்ளிக்கு செல்லவில்லை
We don’t go to school
நாம் (அ) நாங்கள் செல்லவில்லை
They don’t go to school
அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை
He doesn’t go to school
அவர் (அ) அவன் பள்ளிக்கு செல்லவில்லை
She doesn’t go to school
அவர் (அ) அவள் பள்ளிக்கு செல்லவில்லை
It doesn’t go to school
அது பள்ளிக்கு செல்லவில்லை
QUESTION FORM :
Do I go to school?
நான் பள்ளிக்கு செல்கின்றேனா?
Do you go to school ?
நீ பள்ளிக்கு செல்கின்றாயா?
Do we go to school?
நாம் (அ) நாங்கள் செல்கின்றோமா?
Do they go to school?
அவர்கள் பள்ளிக்கு செல்கின்றர்களா?
Does he go to school?
அவர் (அ) அவன் பள்ளிக்கு செல்கின்றாரா(னா)?
Does she go to school?
அவர் (அ) அவள் பள்ளிக்கு செல்கின்றாரா(ளா)?
Does it go to school?
அது பள்ளிக்கு செல்கின்றதா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக